Monday, August 6, 2012

பூவும் பொட்டும் - நாதஸ்வர ஓசையிலே

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள்

( நாதஸ்வர )

கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
மாலையிட்ட பூங்கழுத்தில் தாலி கட்டும் வேளையிலும்
ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும்பொழுதும்
தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடம் ஆடுகின்றாள்

( நாதஸ்வர )

மை வடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில்
கைப் பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர
மெய்சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே
தேவி நடம் ஆடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான்

( நாதஸ்வர )

கற்பில் ஒரு கண்ணகியாய் காதலுக்கு ஜானகியாய்
சிற்ப மகள் வாழ்க்கை என்று தேவன் வந்து பாடுகின்றான்
பத்தினியைக் காவல் கொண்டு பார் புகழ வாழ்க என்று
சத்தியத்தின் மேடையிலே தேவி நடம் ஆடுகின்றாள்
( நாதஸ்வர )

Tuesday, July 17, 2012

காதலுக்கு மரியாதை – இது சங்கீத



இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஒவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையவேன்
இவள் ஆடும் பொன் ஊஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன ஆசையில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ